அதிமுக – பாஜக கூட்டணியில் கருத்து மோதல்கள் அதிகரித்து வந்த நிலையில், பாஜக கட்சி தலைவர்களுக்கும், அதிமுக தலைவர்களுக்கும் இடையே வார்த்தை மோதல்கள் நீடித்து வந்தன.
இந்த நிலையில், நேற்று செய்தியாளர்களுகு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ''பாஜக உடன் அதிமுக கூட்டணியில் இல்லை. தேர்தல் வரும்போதுதான் அடை டிசைட் செய்ய முடியும் என்று கூறி அண்ணாமலையை கடுமையாக விமர்சித்திருந்தார்.
நேற்று அதிமுக- பாஜக கூட்டணியில் இல்லை என்று அறிவித்த நிலையில், அதிமுக தலைமையை டெல்லி பாஜக தலைமை தொடர்பு கொண்டதாக தகவல் வெளியானது.
அதில், டெல்லி தலைமை மீது தங்களுக்கு அதிருப்தி இல்லை எனவும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள் பற்றி பாஜக தலைமையிடம் புகார் அளித்துள்ளனர்.
மேலும், அண்ணாமலையை பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்கினால் மட்டுமே கூட்டணி என்று அதிமுக நிபந்தனை விதித்துள்ளதால், இதுபற்றி டெல்லி பாஜக தலைமை ஆலோசனை மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகிறது.