பிப்ரவரி 14 அன்று மாணவிகள் காதலர்களுடன் கல்லூரிக்கு வரவேண்டும் என வெளியான அறிவிப்பு ஆக்ராவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆக்ராவில் உள்ள பிரபல் செயிண்ட் ஜார்ஜ் கல்லூரி பெயரில் அறிவிப்பு ஒன்று சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. அதில் ஆசிஷ் ஷர்மா என்ற பேராசிரியர் கையெழுத்திட்டுள்ளதாக வெளியான அந்த அறிவிப்பில் பிப்ரவரி 14 அன்று கல்லூரி மாணவிகள் குறைந்தது ஒரு காதலர் உடன் வர வேண்டும். காதலர்கள் இல்லாமல் வரும் மாணவிகள் கல்லூரிக்கு அனுமதிக்கப்பட்ட மாட்டார்கள் என அதில் குறிப்பிடப்பட்டிருந்துள்ளது.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவிகள் மற்றும் பெற்றோர் கல்லூரி நிர்வாகத்தை தொடர்புகொண்டுள்ளனர். இந்த நோட்டீஸ் விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ள கல்லூரி நிர்வாகம் தங்கள் கல்லூரியில் ஆசிஷ் சர்மா என்ற பெயரில் பேராசிரியர் யாரும் இல்லை என்றும், அந்த அறிவிப்பு போலியானது மற்றும் கல்லூரி பெயரை கலங்கப்படுத்தும் நோக்கில் யாரோ வேண்டுமென பரப்பியுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது