ஹைதராபாத்தில் இரண்டு பெண்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் முன்னால் சைக்கோ கொலைகாரன் ஒருவன் பிடிபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள ஆருத்லா கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளியான மைனா ராமுலு. இவருக்கு கடந்த 2003ல் திருமணம் நடந்த நிலையில் அவரது மனைவில் அவருடன் வாழ பிடிக்காமல் வேறு நபருடன் சென்றுவிட்டார். இதனால் பெண்கள் மீது வெறுப்பும் கோபமும் அடைந்த மைனா ராமுலு பெண்களை தன் வலையில் விழ செய்து கொடூரமாய் கொல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளான்.
இந்நிலையில் 16 பெண்களின் கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட மைனா ராமுலு கடந்த 2018ம் ஆண்டில் மேல்முறையீடு செய்து ஜாமீனில் வெளிவந்ததாக தெரிகிறது. இந்நிலையில் சமீபத்தில் ஜூப்ளி ஹில்ஸ் போலீஸாரிடம் தன் மனைவியை காணவில்லை என ஒருவர் புகார் அளித்து சில நாட்களில் அந்த பெண் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இதுபோன்று மற்றொரு பெண்ணும் கொடூரமாக கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பான தீவிர விசாரணையில் இந்த கொலைகளின் பின்னணியில் முன்னாள் சைக்கோ கொலைகாரன் மைனா ராமுலு இருப்பதை கண்டறிந்த போலீஸார் மீண்டும் அவனை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.