தென் மாவட்டத்தில் பெய்யும் கனமழை காரணமாக அகஸ்தியர் அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டி வருவதாகவும் இதனால் அருவிப்பகுதிக்கு அருகில் செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது
எந்த விதமான காற்றழுத்த தாழ்வு நிலை இல்லாமல், புயல் இல்லாமல், பருவமழை கூட இல்லாமல் திடீரென கனமழை பெய்து வருவது வானிலை ஆய்வாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது
இந்த நிலையில் தொடர் மழை காரணமாக பாபநாசம் அருகே உள்ள அகஸ்தியர் அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் அருவிக்கு அருகில் செல்ல பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளம் கொட்டுவதால் குற்றாலத்தில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.