Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உடைந்தது கோரம்பள்ளம் குளக்கரை! ஊருக்குள் செல்லும் வெள்ளம்! – அதிர்ச்சி வீடியோ!

Flood
, திங்கள், 18 டிசம்பர் 2023 (12:03 IST)
தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில் கோரம்பள்ளம் குளம் உடைந்து நீர் வெளியேறும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



தென் தமிழக மாவட்டங்களான கன்னியாக்குமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை இடைவிடாது பெய்து வருகிறது. இதனால் அப்பகுதி நீர்நிலைகள் நிரம்பியுள்ள நிலையில் தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையை ஒட்டிய குடியிருப்பு பகுதிகள் பலவற்றி வெள்ளநீர் புகுந்துள்ளதால் மக்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த இரண்டு நாட்களுக்கு தென் தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி புறநகர் பகுதியில் உள்ள கோரம்பள்ளம் குளத்தில் நீர் முழுக் கொள்ளளவை எட்டிய நிலையில் பலவீனமாக இருந்த கரை உடைந்து சாலையை பிளந்து கொண்டு வெள்ள நீர் வெளியேறி வருகிறது. இவ்வாறு வெளியேறும் இந்த நீர் தூத்துக்குடி நகர பகுதியை நோக்கி சென்று கொண்டிருப்பதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

வெள்ளத்தை தடுக்க மீட்பு படையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் அதேசமயம் அப்பகுதியில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குளம் உடைந்து நீர் வெளியேறும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் தங்கம் விலை சரிவு.. இன்றைய சென்னை நிலவரம்..!