Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக் கடைகளை அடுத்து பார்கள் திறக்கப்படுமா?

Webdunia
திங்கள், 14 ஜூன் 2021 (08:08 IST)
இன்று முதல் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்றும் மது வாங்க வருபவர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடித்து மதுக்களை வாங்கி செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
மேலும் மதுக் கடைகளில் கூட்டம் கூடுவதை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளை தொடர்ந்து பார்களையும் திறக்க அனுமதிக்க வேண்டும் என பார் உரிமையாளர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர் 
 
இதுகுறித்து டாஸ்மாக் பார் சங்கத்தின் தலைவர் கூறியபோது டாஸ்மாக் பார்களில் பணி செய்யும் தொழிலாளர்கள் இந்த வருமானத்தை வைத்துதான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். எனவே அரசு மிக விரைவில் பார்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார். 
டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதித்தது போல் டாஸ்மாக் பார்கள் செயல்படவும் அனுமதிக்க வேண்டும் என பார் உரிமையாளர் சங்கத்தினர் கூறியுள்ள நிலையில் இதற்கு அனுமதி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments