Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தை அடுத்து புதுவையிலும் விடுமுறை.. தீபாவளி கொண்டாடு மக்கள் மகிழ்ச்சி..!

Webdunia
செவ்வாய், 7 நவம்பர் 2023 (14:05 IST)
தீபாவளிக்கு மறுநாள் அதாவது நவம்பர் 13ஆம் தேதி தமிழகத்தில் விடுமுறை என தமிழக அரசு அறிவித்த நிலையில் புதுவையிலும் நவம்பர் 13-ம் தேதி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளதால் தீபாவளி கொண்டாடும் புதுவை மாநில மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
இந்த ஆண்டு தீபாவளி நவம்பர் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருவதால் அரசு ஊழியர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தீபாவளி அன்று இரவே மறுநாள் வேலைக்கு செல்வதற்காக சொந்த ஊரிலிருந்து கிளம்ப வேண்டிய நிலை இருந்ததால் திங்கட்கிழமை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. 
 
இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த தமிழக அரசு நவம்பர் 13ஆம் தேதி விடுமுறை என்றும் அதற்கு பதிலாக நவம்பர் 18ஆம் தேதி வேலை நாள் என்றும் அறிவித்தது 
 
 இதேபோல் தமிழகத்தை அடுத்து தற்போது புதுவையிலும் நவம்பர் 13-ஆம் தேதி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளதால் அம்மாநில மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை :62 வயது முதியவர் போக்ஸோவில் கைது!

அவர் இல்லைன்னா உயிரே போயிருக்கும்! காப்பாற்றிய ஆட்டோ டிரைவரை அழைத்து நன்றி சொன்ன சயிஃப் அலிகான்!

சமணர் குகைக்கு பச்சை பெயிண்ட் அடித்த மர்ம நபர்கள்! - திருப்பரங்குன்றத்தில் தொடரும் மத பிரச்சினை!

பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவு வாபஸ்.. நிதிஷ் குமார் கட்சி அறிவிப்பு..!

சென்னை அண்ணாநகர் மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்.. இளம்பெண் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments