Publish Date: Tue, 07 Nov 2023 (10:55 IST)
Updated Date: Tue, 07 Nov 2023 (10:57 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டே வரும் இடையே தீபாவளிக்கு தங்கம் வாங்க சரியான நேரமா என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்து உள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்து தற்போது பார்ப்போம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 30 ரூபாய் சரிந்து ரூபாய் 5670.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 240 சரிந்து ரூபாய் 45360.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6140.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 49120.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை 70 காசுகள் குறைந்து ரூபாய் 77.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 77500.00 எனவும் விற்பனையாகி வருகிறது