முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த பேரறிவாளன் சமீபத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு காரணமாக விடுதலை செய்யப்பட்டார்
இதனை அடுத்து மற்ற ஆறு பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் சிறையில் இருந்த நிலையில் அவர்களில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார். இதனை அடுத்து மற்ற ஆறு பேரின் விடுதலைக்கும் முயற்சி செய்யப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே கூறிய நிலையில் இது குறித்து சட்ட வல்லுனர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதனையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது