Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரையை அடுத்து சென்னையில் கர்ப்பிணி மருத்துவர் கொரோனாவுக்கு பலி!

Webdunia
ஞாயிறு, 23 மே 2021 (14:58 IST)
மதுரையை அடுத்து சென்னையில் கர்ப்பிணி மருத்துவர் கொரோனாவுக்கு பலி!
மதுரையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கர்ப்பிணி மருத்துவர் சண்முகப்பிரியா என்பவர் கொரோனாவுக்கு உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது சென்னையில் கார்த்திகா என்ற கர்ப்பிணி மருத்துவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
சென்னையைச் சேர்ந்த 29 வயது மருத்துவர் கார்த்திகா என்பவர் கர்ப்பிணியாக இருந்த நிலையில் திடீரென அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் சற்று முன் உயிரிழந்தார் 
 
மருத்துவர் கார்த்திகா உயிர் இழப்பதற்கு முன் அவர் செல்போனில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் ’தயவுசெய்து கொரோனா வைரஸை யாரும் எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். என்னால் இப்போது பேசக்கூட முடியவில்லை. இருப்பினும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக பேசுகிறேன். அனைவரும் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருங்கள்’ என்று கூறியுள்ளார். மதுரையை அடுத்து சென்னையிலும் கர்ப்பிணி மருத்துவர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வட்டார போக்குவரத்து அலுவலர், ஆசிரியை மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை.. என்ன காரணம்?

பால் கேன்களில் எச்சில் துப்பி விநியோகம் செய்த பால்காரர்.. சிசிடிவி ஆதாரத்தால் கைது!

பாதி வழியிலேயே ரிப்பேர் ஆகும் சென்னை மின்சார பேருந்து? பயணிகள் அவதி!

தெருவில் விளையாடிய 2 வயது குழந்தை.. ஆட்டோ மோதியதால் பரிதாப பலி.. ராமநாதபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

பாஜக என்ன ப்ளான் பண்ணாலும், அதிமுககிட்ட நடக்காது! - அதிமுக அன்வர் ராஜா கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments