Publish Date: Sat, 22 May 2021 (12:23 IST)
Updated Date: Sat, 22 May 2021 (12:26 IST)
அனைத்து சட்டமன்ற கட்சி உறுப்பினர்கள் குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் 19 மருத்துவ நிபுணர்கள் முதல்வருடன் ஆலோசனையில் பங்கேற்றனர். மருத்துவ குழுவினர் ஊரடங்கை மேலும் 2 வாரம் நீட்டிக்க்கும் மாறு பரிந்துரை செய்துள்ளனர்.
மருத்துவ நிபுணர்கள் ஆலோசனைக்கு பின்னர் சட்டமன்ற கட்சி உறுப்பினர்களின் குழுவுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதில், அதிமுக சார்பில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தில் தளர்வுகளே இல்லாத முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு பரிசீலனை செய்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளது, ஆனால் கட்டுக்குள் இல்லை. கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கவே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால், முழுஊரடங்கை விடுமுறை என கருதி பொதுமக்களில் சிலர் ஊர் சுற்றுகின்றனர். எனவே தளர்வுகளற்ற ஊரடங்கு அமலுக்கு வரும் என தெரிகிறது.
Sugapriya Prakash
Publish Date: Sat, 22 May 2021 (12:23 IST)
Updated Date: Sat, 22 May 2021 (12:26 IST)