Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்று ஒரே நாளில் 2 மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

Webdunia
வியாழன், 16 ஜூலை 2020 (07:35 IST)
நேற்று ஒரே நாளில் 2 மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு கொரோனா
நேற்று  கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து அவர் கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் வெளியான செய்தியை பார்த்தோம்
 
இந்த நிலையில் கோவை ஆட்சி தலைவரை அடுத்து நேற்று காஞ்சிபுரம் ஆட்சி தலைவர் பொன்னையா அவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று ஒரே நாளில்  2 மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
 
கடந்த சில தினங்களாக காஞ்சிபுரம் ஆட்சி தலைவர் பொன்னையா அவர்கள் காய்ச்சல் காரணமாக அலுவலகத்திற்கு வராமல் தனிமைப்படுத்திக் கொண்டிருந்ததாகவும், அவருக்கு மருத்துவர்கள் கொரோனா பரிசோதனை செய்த நிலையில் நேற்று பொன்னையாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
மேலும் மருத்துவர்களின் அறிவுரைப்படி காஞ்சிபுரம் ஆட்சி தலைவர் பொன்னையா அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

விமானி இல்லாததால் மணிக்கணக்கில் காத்திருப்பு.. டேவிட் வார்னர் ஆதங்கம்..!

செல்போன் சார்ஜ் போட்டபோது ஷாக்.. சென்னை பள்ளி மாணவி பரிதாப பலி..!

சிறையில் தீட்டப்பட்ட சதி.. தடுக்க முடியாமல் குறட்டை விட்டு தூங்கும் திமுக அரசு.. அன்புமணி

எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கல.. RSS தேசபக்தர்களை உருவாக்கியது! - மகாராஷ்டிர ஆளுநர் சர்ச்சை பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments