Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மறைந்த நடிகரின் சகோதரருக்குக் கொரோனா உறுதி!

Advertiesment
மறைந்த நடிகரின் சகோதரருக்குக் கொரோனா உறுதி!
, புதன், 15 ஜூலை 2020 (19:13 IST)
சமீபத்தில் மாரடைப்புக் காரணமாக மறைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் சகோதரருக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என அறியப்பட்ட நடிகர் அர்ஜுன் என்பது அனைவரும் அறிந்ததே. இவரது உறவினர் சிரஞ்சீவி சர்ஜா என்பவர் கன்னட திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் ஆவார். இந்த ஆண்டு மட்டும் அவர் 8 படங்களில் நடித்துக் கொண்டிருந்தார் என்பதும் அவற்றில் நான்கு படங்கள் வெளியாகிவிட்டன என்பதும், நான்கு படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 7 ஆம் தேதி அவர் திடீரென மரணமடைந்தார்.

மூச்சுத்திணறலுக்காக அனுமதிக்கப்பட்ட அவர் மாரடைப்பு வந்து மருத்துவமனையில் மரணமடைந்தார். இந்த செய்தியானது கன்னட திரையுலகினர் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது மறைவின் அதிர்ச்சியில் இருந்து இப்போதுதான் மெல்ல மெல்ல அவரது குடும்பத்தினர் மீண்டு வருகின்றனர்.

இந்நிலையில் அவர்களுக்கு மேலும் அதிர்ச்சியளிக்கும் விதமாக சிரஞ்சீவியின் சகோதரர் துருவாவிற்கும் அவரது மனைவிக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கந்தசஷ்டி கவசத்தில் அறிவியல்பூர்வமான ஆத்ம பலன்கள்: நடிகர் ராஜ்கிரண்