ராசிபுரம் அருகே 38 ஆண்டுகளுக்கு பிறகு பெரிய மாரியம்மன் கோவில் திறந்து வழிபாடு செய்த பட்டியலின மக்கள்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த தொபப்பட்டி கிராமத்தில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான பெரிய மாரியம்மன் திருக்கோவில் உள்ளது.கடந்த 38 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் இரு தரப்பினர் இடையே கோவிலில் சென்று வழிபாடு செய்ய பிரச்சனை காரணமாக கோவில் பூட்டிய நிலையிலேயே இருந்தது. ஒருத்தரப்பினர் வழிபாடு செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தற்போது இரு தரப்பினரும் கோவிலில் சென்று தரிசனம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதனை தொடர்ந்து பட்டியலின மக்கள் மக்கள் கோவிலுக்குள் சென்று தேங்காய், பழங்களுடன் சிறப்பு பூஜைகள் செய்து மகிழ்ச்சியாக வழிபட்டனர். அப்பகுதியில் எவ்வித அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க கோவிலை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறப்பு பூஜைகள் செய்து பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்தனர். 38 ஆண்டுகளுக்குப் பிறகு பட்டியலின மக்கள் கோவிலுக்குள் சென்று வழிபட உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பெரிய மாரியம்மனை வழிபட்டு சென்றனர்.