தமிழகத்தில் முதன்முறையாக நம்மவர் பிறந்த நாளையொட்டி புதுமையான முறையில் பேருந்து விளம்பரம் செய்த கரூரை கலக்கிய கமல் கட்சியினர்
உலக நாயகன் கமல்ஹாசன் இன்று தனது 66 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில், ட்விட்டரில் HBDKamalHaasan என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. கமல்ஹாசனின் மகளான ஸ்ருதி ஹாசன், தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இந்நிலையில்., உலக நாயகனும், மாபெரும் நடிகரும், மக்கள் நீதிமையம் கட்சியின் நிறுவனத்தலைவரும், நம்மவருமான கமலஹாசனின் 66 வது பிறந்த தினம் உலகமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
தமிழகத்தில் மைய மாவட்டமான கரூர் மாவட்டத்தில் குறிப்பாக கரூரில் வித்யாசமான முறையில் கொண்டாடப்பட்டது. கரூர் மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் தலைமையில், கரூர் மத்திய நகர செயலாளர் முருகேஷன் என்கின்ற கணேசன் முன்னிலையில், ஒரு வித்யாச முறையில் புதிய பேருந்து ஒன்றினை கட்சியின் பணிகளுக்காகவும், கட்சி சம்பந்தமான விளம்பரத்திற்காகவும் தமிழக அளவில் முதன்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளனர். மேலும், இந்த பேருந்து மூலம் ஏற்படுத்தியுள்ள எங்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியின் விளம்பரம் தமிழக அளவில் ஒரு மாபெரும் விளம்பர யுக்தியாக விளங்கும் வகையில் முழு நேரப்பணியாக கரூர் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் செய்து வருவதாக கரூர் மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் தெரிவித்தார். மேலும், இந்நிகழ்ச்சியில்., மேகி முருகேஷன் மற்றும் கட்சியின் உறுப்பினர்களும், ஒன்றிய செயலாளர்களும், நகர செயலாளர்களும் கலந்து கொண்டனர். கரூர் மாவட்ட்த்தினை சுற்றிலும் நகரம் மற்றும் சிற்றூர், பேரூர்களுக்கும், கிராமங்கள் என்று நம்மவரின் பிறந்த நாளை அனைவரும் அறியுமாறு தயார் படுத்தும் விதமாகவும், இந்த விளம்பர யுக்தியை கரூர் மாவட்ட மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் தயாரித்து அறிமுகப்படுத்தியுள்ளனர். முன்னதாக கரூர் பேருந்து நிலையத்தில் வெடி வைத்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்ட்து குறிப்பிடத்தக்கது.