Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வழக்கம் போல பட்ஜெட் உரையை புறக்கணித்து அதிமுக வெளிநடப்பு!

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (10:25 IST)
தமிழக பட்ஜெட் உரையை புறக்கணித்து சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர் அதிமுக உறுப்பினர்கள். 

 
தமிழ்நாடு 2022-23ம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் இன்று தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார்.
 
அப்போது பட்ஜெட் தாக்கலுக்கு முன் பேச வாய்ப்பு கோரி அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனை ஏற்க மறுத்த சபாநாயகர் அப்பாவு, பட்ஜெட் உரை முடிந்ததும் பேச வாய்ப்பளிப்பதாக அதிமுக எம்எல்ஏக்களிடம் உறுதி அளித்தார். அத்துடன் பட்ஜெட் உரையை கேட்குமாறு அதிமுகவினருக்கு சபாநாயகர் அப்பாவு கோரிக்கை விடுத்தார். 
 
ஆனால், இதனை ஏற்க மறுத்து தமிழக பட்ஜெட் உரையை புறக்கணித்து சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர் அதிமுக உறுப்பினர்கள். மேலும் சட்டப்பேரவை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் வீட்டில் சோதனை நடத்தியதை கண்டித்து அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சட்டசபையில் கோஷங்கள் எழுப்பினர் என்பது கூறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்து தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments