திமுக கவுன்சிலரை கொண்டு சென்ற அதிமுக! – கரூரில் பரபரப்பு!

Webdunia
திங்கள், 6 ஜனவரி 2020 (17:04 IST)
திமுக சார்பில் நின்று வெற்றிபெற்ற கவுன்சிலரை அதிமுகவினர் அழைத்து சென்றதால் கரூரில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவி பட்டியல் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிமுக சார்பில் பட்டியல் பிரிவில் யாரும் வெற்றி பெறவில்லை. திமுக சார்பில் மூன்று வார்டுகளில் போட்டியிட்ட பட்டியல் பிரிவை சேர்ந்த பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

10 இடங்களில் வெற்றிபெற்றும் ஒன்றிய குழு தலைவர் பதவியை அதிமுக வகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று கவுன்சிலர்கள் பதவியேற்பு முடிந்த நிலையில் ஏழாவது வார்டு திமுக பெண் கவுன்சிலரை அதிமுகவினர் காரில் அழைத்து சென்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த திமுகவினர் அதிமுக வாகனங்கள் மீது மண்ணை வாரி தூற்றி கோஷங்களை எழுப்பியுள்ளனர். இந்த சம்பவத்தால் கிருஷ்ணராயபுரம் பகுதி பரபரப்புடன் காணப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments