அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

Siva
ஞாயிறு, 30 ஜூன் 2024 (18:39 IST)
கடலூரில் அதிமுக பிரமுகர் புஷ்பநாதன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த கொலை வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
கடலூரில் அதிமுக பிரமுகர் புஷ்பநாதன் கொலை வழக்கில் ஆடு விற்பனை தொடர்பான முன்பகை இருந்ததாக முதல் கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ள நிலையில் புஷ்பநாதன் கொலை வழக்கில் மூன்று பேர் கைது செய்துள்ளனர்.
 
பல்வேறு இடங்களில் ஆடுகளை திருடி மூன்று பேர் புஷ்பநாதனிடம் விற்பனை செய்ததாகவும் இதில் தான் அந்த மூவருக்கும் புஷ்பநாதனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாகவும் இந்த முன்பகை காரணமாக தான் புஷ்பநாதன் கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
 ஓர் ஆண்டுக்கு முன்பே ஆடுகளை திருடிய வழக்கில் மூவரும் சிக்கிக்கொண்டனர் என்றும் ஆனால் மூவரையும் ஜாமினில் எடுக்கவோ அல்லது அவர்களது வாகனத்தை மீட்கவோ புஷ்பநாதன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதால் முன் பகை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்த முன் பகை காரணமாக தான் புஷ்பநாதன் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ள நிலையில் மேலும் போலீசார் இந்த வழக்கில் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி நேரத்தில் மெட்ரோ ரயில் சேவையில் திடீர் மாற்றம்.. 14 நிமிடத்திற்கு ஒரு ரயில் தான்..!

காலையில் குறைந்த தங்கத்தின் விலையில் மாலையில் நேரத் திடீர் ஏற்றம்: சென்னை நிலவரம்

அரசு ஊழியர்களுக்கு சம்பள பாக்கி.. முதலமைச்சருக்கு சம்பள உயர்வா? பாஜக கண்டனம்..!

போலி உலக சாதனை சான்றிதழ் என அம்பலம்.. தர்ம சங்கடத்தில் முதல்வர் சித்தராமையா..!

இந்தியாவின் ஆதார் கார்டு போலவே இங்கிலாந்து ‘பிரிட் கார்டு’.. பிரதமர் ஸ்டார்மர் திட்டம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments