சென்னை சைதாப்பேட்டையில், வயிற்றுப்போக்கு ஏற்பட்டு 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த பகுதி மக்களுக்கு இரண்டாவது நாளாக பொதுமக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
அபித் காலனியில் மெட்ரோ குடிநீர் வாரியம் லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்த நிலையில் உயிரிழந்த சிறுவன் வீட்டின் முன்பு இருந்த அடிபம்பிற்கு வீட்டின் உரிமையாளர் பூட்டு போட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் சிகிச்சையில் உள்ள 7 வயது சிறுமியின் உடல்நிலை தேறி வருவதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை சைதாப்பேட்டையில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் அந்த குடிநீரை குறித்த 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அண்ணாமலை உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இது குறித்து சென்னை மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குடிநீரில் கழிவு நீர் கலக்கவில்லை என்று விளக்கம் அளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன.