Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கரூரில் அதிமுகவினர் அராஜகம்: கடும் கொந்தளிப்பில் மக்கள்

Advertiesment
கரூரில் அதிமுகவினர் அராஜகம்: கடும் கொந்தளிப்பில் மக்கள்
, ஞாயிறு, 6 ஜனவரி 2019 (16:32 IST)
அரசு உத்திரவினை மீறும் அ.தி.மு.க கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் ரவுண்டானாவில் அ.தி.மு.க வின் அரசியல் கட்சி விளம்பரம்
கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளின் சுற்றுச்சுவர்களில் அ.தி.மு.க வினர் போட்டி போட்டுக் கொண்டு, சுவர் விளம்பரம் எழுதிவருகின்றனர். 
 
கரூர் ரவுண்டானா, கரூர் பைபாஸ்ரவுண்டானா ஆகிய பகுதிகளில் விளம்பரம் செய்ய மாவட்ட நிர்வாகம் தடை செய்துள்ளது. இதற்கு முன்பாக நீதிமன்றமும் பொது இடங்களில் விளம்பரம் செய்ய தடை செய்ய இருப்பினும், கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் பல்வேறு விளம்பரங்கள் தடையை மீறி வரைந்து வருகின்றனர். கரூர் பைபாஸ் ரவுண்டானாவில் கன்னியாகுமரி டூ காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை எண் 7 ல் ஆக்கிரமிப்பில் அ.தி.மு.க வின் கட்சி விளம்பரம் படுஜோராக நடைபெற்றுள்ளது. 
 
இதை கரூர் மாவட்ட நிர்வாகம் கண்டும் காணாமல் இருந்து வருவதோடு, அது ஆட்சியின் சாதனை குறித்த விளம்பரம் அல்ல, அ.தி.மு.க வின் அரசியல் கட்சி விளம்பரம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் உள்ள குமரன் பள்ளி என்கின்ற அரசுப் பள்ளியின் சுவர் ஒரத்தில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளிடையேயும், அரசியலை வளர்க்கும் பொருட்டு, அதுவும் அ.தி.மு.க கட்சியினை பரப்பும் வகையில் அ.தி.மு.க வினரின் சுவர் விளம்பரம் தீவிரமடைந்துள்ளது. 
 
தனியார் நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் இந்த விளம்பரங்கள் இல்லாமல்., கோட்டாட்சியர் அலுவலகம், பயணியர் அலுவலகம், கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகம், திருவள்ளுவர் மைதானம் உள்ளிட்ட பல்வேறு அரசிற்கு சொந்தமான இடங்களிலும், பள்ளிகளிலும் மட்டுமே அ.தி.மு.க நிர்வாகிகள் கவனம் செலுத்துவதற்கு பல்வேறு சமூக நல ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 
 
மேலும் அரசுப்பள்ளி மற்றும் அரசு அலுவலகங்களின் சுற்றுச் சுவரில், அரசியல், சினிமா விளம்பரங்களை தடுக்கும் வகையில், இயற்கை காட்சிகள் வரைந்து, திருக்குறள்கள் எழுதப்பட வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

C.ஆனந்தகுமார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காசு கேட்ட கள்ளக்காதலி: காலி செய்த கள்ளக்காதலன்