Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரவக்குறிச்சியில் கமல்ஹாசன் மீது வழக்குப் பதிவு

அரவக்குறிச்சியில் கமல்ஹாசன் மீது வழக்குப் பதிவு
, செவ்வாய், 14 மே 2019 (19:45 IST)
ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக பேசி அவதூறு பரப்பியதாக நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத தகவல் வெளியாகிறது.
இரு சமூகத்தினரிடையே பிரிவினையை எற்படுத்தும் வகையில் பேசியதாக கமல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
சுதந்திர இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி நாதுராம் கோட்சே என்று தெரிவித்திருந்தார். இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
இதுகுறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கமலின் நாக்கை அறுக்க வேண்டும் என்று கூறியது சர்ச்சையான  நிலையில் ம நீ ம கட்சி உறுப்பினர்கள் அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று தெரிவித்தனர்.
 
இதனையடுத்து  இந்து முன்னணி பிரமுகர் ராமகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் அரவக்குறிச்சி போலீசார் நடவடிக்கை அடுத்துள்ளனர்.
 
அதில்,மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில்  செயல்பட்டதாக கமல்ஹாசன் மீது 153A, 295A ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
webdunia
இந்நிலையில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழ்மணி வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து கரூர் மாவட்ட எஸ்.பி விக்ரமன் கூறியுள்ளதாவது:
 
தேர்தல் விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்  எனவும்  மத, இன , சாதி உணர்வை தூண்டும் விதமாக பேசுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எஸ்.பி. விக்ரமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆட்சிக்கு வந்தால் ரூ.72 ஆயிரம் வங்கிக்கணக்கில் டெபாசிட்: ராகுல்காந்தி அறிவிப்பு