Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈபிஎஸ்-ஓபிஎஸ் தொடங்கும் அதிமுக சேனல் பெயர் என்ன தெரியுமா?

Webdunia
சனி, 8 செப்டம்பர் 2018 (13:30 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை ஜெயா டிவி அதிமுகவின் அதிகாரபூர்வ தொலைக்காட்சியாக இருந்தது. ஆனால் அவருடைய மறைவிற்கு பின்னர் ஜெயா டிவி முழுக்க முழுக்க தினகரன் அணியின் கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டதால் அதிமுகவுக்கு என ஒரு தொலைக்காட்சி இல்லாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் தற்போது ஜெயலலிதாவின் பெயரில் ஒரு நியூஸ் சேனல் தொடங்க அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்களின் முயற்சியால் தொடங்கப்படவுள்ள இந்த சேனலுக்கு 'நியூஸ் ஜெ' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சேனலின் லோகோ மற்றும்  மொபைல் ஆப் ஆகியவை வரும் 12ஆம் தேதி அறிமுகம் செய்யவிருப்பதாகவும் இம்மாத இறுதியில் இந்த சேனலின் முதல் ஒளிபரப்பு தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜெயா டிவிக்கும் மற்ற செய்தி டிவிக்களுக்கும் இணையாக இந்த 'நியூஸ் ஜெ' டிவி இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments