18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தீர்ப்பு நாளை மறுநாள்? ஆளும் அரசுக்கு பாதிப்பு இல்லை

திங்கள், 3 செப்டம்பர் 2018 (20:02 IST)
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கின் விசாரணைகள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு நாளை மறுநாள் வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

 
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 18பேர் தினகரன் ஆதரவு காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த தகுதி நீக்கத்தை எதிர்த்து அவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
 
இந்த வழக்கில் இரண்டு விதமான தீர்ப்புகள் இரண்டு நீதிபதிகளால் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மீண்டும் தற்போது வேறு நீதிபதி தலைமையில் இந்த வழக்கின் விசாரணை தொடங்கி முடிவடைந்தது.
 
இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு நாளை மறுநாள் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தீர்ப்பு ஆளும் அரசுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? என்று பலரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
 
இரு தர்ப்பினரும் தங்களுக்குதான் ஆதரவாக வரும் என்று கூறி வருகின்றனர். பெரும்பாலானோர் ஆளும் அரசுக்கு எவ்வித பாதிப்பு ஏற்படுத்தாத தீர்ப்புதான் வெளிவரும் என்று கூறியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் பிச்சை பாத்திரம் ஏந்தாதீர்: பினராயி விஜயனை தாக்கி பேசிய காங்கிரஸ்