Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 14 April 2025
webdunia

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான ஆலோசனை கூட்டம் தேவையற்றது - தம்பிதுரை

Advertiesment
அதிமுக
, வெள்ளி, 9 மார்ச் 2018 (14:00 IST)
உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக நீர்வளத்துறை சார்பில் நடைபெறும் ஆலோசனை கூட்டம் தேவையற்றது என்று துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

 
உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக தமிழகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில் பிரதமரை நேரில் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்த வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி அதிமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் அமளி ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து மத்திய அரசு ஆலோசணை கூட்டம் நடத்த ஒப்புக்கொண்டது. நீர்வளத்துறை சார்ப்பில் தமிழகம், கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநில அரசுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
 
அதன்படி 4 மாநிலங்களின் அரசுப் பிரநிதிகள் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த கூட்டம் தேவையற்றது என்று அதிமுக எம்.பி மற்றும் துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்திள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை நாடாளுமன்றத்தை அதிமுக எம்.பி.க்கள் முடக்குவோம். நீர்வளத்துறை சாப்பில் நடத்தப்படும் ஆலோசனை கூட்டம் தேவையற்றது என்று கூறியுள்ளார்.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உஷா மரணம் எதிரொலி - வாகன சோதனைகளுக்கு தடை