Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நான் பாஜகவுக்கு எதிரானவன் அல்ல: பாஜக ஆளும் மாநிலத்தில் பேசிய கமல்

Advertiesment
நான் பாஜகவுக்கு எதிரானவன் அல்ல: பாஜக ஆளும் மாநிலத்தில் பேசிய கமல்
, வெள்ளி, 9 மார்ச் 2018 (13:35 IST)
கடந்த மாதம் 'மக்கள் நீதி மய்யம்' என்ற கட்சியை தொடங்கிய கமல், முழு நேர அரசியல்வாதியாக மாறி அரசியல் பேசுவதிலேயே பிசியாக உள்ளார். மதுரையில் அரசியல் கட்சி தொடக்கவிழா, சென்னையில் மகளிர் தின கூட்டம், நாள் தோறும் பத்திரிகையாளர் சந்திப்பு, தினமும் டுவிட்டரில் பதிவு என அவர் கமல் பிசியாக இருக்கும் கமல் இன்று பாஜக ஆட்சி செய்யும் மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

நான் பாஜகவுக்கு எதிரானவன் அல்ல, பாஜகவின் மக்கள் விரோத கொள்கைக்கு எதிரானவன். நான் இந்து விரோதி அல்ல, இந்துத்துவாவுக்கு எதிரானவன். என் சினிமா வாழ்க்கை நிறைவு பெற்றது, இனி சாகும்வரை மக்கள் பணியாற்றவே விருப்பம்.

தமிழகத்தில் குப்பை அரசியல் நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் மாற்றத்துக்காக மக்கள் வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் அடுத்த அரசை நாங்கள் அமைக்க முயற்சி செய்வோம். தேர்தலில் வெற்றி பெறுவதை விட சித்தாந்தமே முக்கியமானது. பணம் சம்பாதிக்க அரசியலில் இணையவில்லை. ஊழல் அரசியல்வாதிகளுக்கு இனி எந்த இடமும் இல்லை. காந்தி, பெரியார், அம்பேத்கார் ஆகிய தலைவர்கள்தான் எனது ஹீரோக்கள்” என்று பேசினார்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோடி சிலை உடைப்பு: உத்திரபிரதேசத்தில் பரபரப்பு