Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொகுதிக்கு வராமல் ஆர்கே நகரில் ஆட்டம் போட்டுவிட்டு மக்களை மிரட்டும் எம்எல்ஏ!

தொகுதிக்கு வராமல் ஆர்கே நகரில் ஆட்டம் போட்டுவிட்டு மக்களை மிரட்டும் எம்எல்ஏ!

Webdunia
வியாழன், 14 டிசம்பர் 2017 (13:17 IST)
கந்தர்வகோட்டை தொகுதி அதிமுக எம்எல்ஏ ப.ஆறுமுகம் தொகுதிப் பக்கம் வராமல் இருந்ததால் அதனை கேள்விக்கேட்ட இளைஞரை தொலைப்பேசியில் மிரட்டிய சம்பவம் நடந்துள்ளது.
 
கந்தர்வக்கோட்டை தொகுதி எம்எல்ஏ அலுவலகம் பல மாதங்களாக திறக்காமல் மூடியே கிடக்கிறது. இதனால் தங்கள் எம்எல்ஏவை காணவில்லை, அவரை கண்டுபிடித்து தாருங்கள் என சிலர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
 
இந்நிலையில் எம்எல்ஏ ப.ஆறுமுகம் கடந்த 7-ஆம் தேதி ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக  வேட்பாளரை ஆதரித்து ஜீப்பில் நின்று குத்தாட்டம் போட்ட வீடியோ வெளியாகி வைரலாக பரவியது.
 
இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் கந்தர்வகோட்டை தொகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் சிங்கப்பூரில் இருந்து எம்எல்ஏ ஆறுமுகத்தை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு சொந்த தொகுதியை மறந்துட்டு ஆர்கே நகர்ல இருக்கீங்களே என்று கேட்டுள்ளார்.
 
அதற்கு எம்எல்ஏ ஆறுமுகம், நீ யார் என்னை கேள்வி கேட்க? சிங்கப்பூர்ல இருந்து பேசுற நீ யார்? பண்ணையடிக்க போனா அதை மட்டும் செய்யனும். என் தொகுதியில இருந்து கேட்டா பதில் சொல்வேன் என்றுள்ளார்.
 
சொந்த தொகுதியை பார்க்காம ஆர்கே நகர்ல என்ன வேலை? கந்தர்வகோட்டைக்கும் ஆர்கே நகருக்கும் என்ன சம்மந்தம் என்று அந்த இளைஞர் மீண்டும் கேட்க, நீ எந்த ஊர் என்று மிரட்டல் தொணியில் எம்எல்ஏ பேச்சை தொடர்கிறார். இந்த ஆடியோவும் தற்போது பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - வங்கதேசம் இடையே முக்கிய பொருட்கள் இறக்குமதிக்குத் தடை.. அதிரடி உத்தரவு.

ராகுல் காந்தியின் செய்தி தொடர்பாளராக மாறிய முதல்வர் ஸ்டாலின்: குஷ்பு கடும் விமர்சனம்

மு.க.ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார்? அன்புமணி கேள்வி..!

மதுரையில, நம்ம கொள்கை எதிரியையும், அரசியல் எதிரியையும் சமரசமே இல்லாம எதிர்ப்போம்: விஜய்

ஆசிரியர் தகுதி தேர்வை வேறொரு தேதிக்கு மாற்ற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments