ஜிஷா கொலை வழக்கு ; கொலையாளிக்கு தூக்கு தண்டனை : நீதிமன்றம் தீர்ப்பு

Webdunia
வியாழன், 14 டிசம்பர் 2017 (12:48 IST)
கேரளாவில் கல்லூரி மாணவி ஜிஷாவை பாலியல் பலாத்காரம் செய்து குற்றவாளிக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை அளித்து தீர்ப்பளித்துள்ளது.


 
கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி, சட்டக்கல்லூரி மாணவி ஜிஷா மிகவும் மோசமான சிதைக்கப்பட்ட முறையில் கால்வாய் ஒன்றில் அருகில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த வழக்கில் அஸ்ஸாமை சேர்ந்த அம்ரூல் இஸ்லாம் (23) என்ற வாலிபரை காவல் துறையினர் கைது செய்தனர்.
 
ஜிஷாவின் உடலில் 30 இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், மாணவியின் தலையிலும், வயிறு பகுதியிலும் பலமாக தாக்கப்பட்டுள்ளது, மார்பகம் மற்றும் உறுப்பு பகுதி கூர்மையான அயுதங்களால் சிதைக்கப்பட்டுள்ளது என பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டது. 
 
கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கு எர்ணாகுளம் நீதிமன்றத்தில் கடந்த 8 மாதங்களாக நடைபெற்று வந்தது. இதில், அம்ரூல் இஸ்லாம் குற்றவாளி என போலீசார் தரப்பில் நிரூபிக்கப்பட்டது. 
 
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. தீர்ப்பில், அம்ரூல் இஸ்லாமிற்கு நீதிபதி தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்