விக்கிரவாண்டித் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக பெற்றுள்ள வெற்றிக்கு பாமக முக்கியக் காரணம் எனக் கருதிய அதிமுக தைலாபுரம் தோட்டம் சென்று நேரடியாக நன்றி தெரிவிக்கவுள்ளது.
மக்களவைத் தேர்தல் படுதோல்விக்குப் பிறகும் அதிமுக கூட்டணியில் பாமக, தேமுதிக, பாஜக ஆகியக் கட்சிகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் இடைத்தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு சீட் கொடுக்காமல் தானே நின்றது அதிமுக. இரு தொகுதிகளிலும் அமோகமாக பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது அதிமுக.
இந்த வெற்றிக்குப் பாமக முக்கியமான காரணம் என நினைக்கிறது அதிமுக. அதற்காக தேர்தல் முடிவுகள் வந்த உடனேயே ராமதாஸுக்கு போன் செய்து நன்றி தெரிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அது மட்டுமில்லாமல் விக்கிரவாண்டித் தேர்தல் பொறுப்பு அமைச்சர்களை நேரிலும் சென்று வாழ்த்தி நன்றி தெரிவிக்க சொல்லியுள்ளார். இதனால் அமைச்சர்கள் தைலாபுரம் தோட்டம் சென்று ராமதாஸை சந்திக்கவுள்ளனர்.
ஆனால் மற்றக் கூட்டணிக் கட்சித் தலைவர்களை இதுபோல சென்று சந்திப்பார்களா எனத் தெரியவில்லை.