தேசிய குடிமக்கள் பதிவேட்டை தமிழகத்தில் அமல்படுத்தினால் அதிமுக எதிர்க்கும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் கடந்த மாதம் திமுக கூட்டணி கட்சிகள் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பேரணி நடைபெற்றது.
இந்நிலையில், இன்று தமிழக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது திமுக. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், சிறுபான்மை மக்களுக்கா ஆதரவாக உள்ளதாக கூறும் அதிமுக அரசு, அவர்கள் வாழ்வாதாரத்திற்கு எதிரான சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
தற்போது ஸ்டாலினின் இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக, தேசிய குடிமக்கள் பதிவேட்டை தமிழகத்தில் அமல்படுத்தினால் அதிமுக எதிர்க்கும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதில் அளித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் தோல்விக்கு குடியுரிமை சட்டத்திற்கு அதிமுக ஆதரவு அளித்ததே காரணம் என கருத்துக்கள் வெளியான நிலையில் அதிமுக பாஜகவுக்கு எதிரான நகர்வுகளை மேற்கொள்வதாக தெரிகிறது.