Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திமுக வசம் 2 லட்சம் அதிமுகவினர்: அதிர்ந்து போன ஈபிஎஸ் - ஓபிஎஸ் அண்ட் கோ!!

Advertiesment
திமுக வசம் 2 லட்சம் அதிமுகவினர்: அதிர்ந்து போன ஈபிஎஸ் - ஓபிஎஸ் அண்ட் கோ!!
, செவ்வாய், 7 ஜனவரி 2020 (11:42 IST)
சுமார் 2 லட்சம் அதிமுகவினர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய திட்டமிட்டுள்ளதாக் செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
கடந்த டிசம்பர் மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றதில் திமுக பெரும்பானமையான இடங்களில் வெற்றி பெற்றது. 
 
இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றிபெற்றதையடுத்து ராஜகண்ணப்பன் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, 
webdunia
தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. எனது தலைமையில் சுமார் 2 லட்சம் பேர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய திட்டமிட்டுள்ளோம். இந்த இணைப்பு விழா மதுரையில் மிக பிரமாண்டமாக வருகிற பிப்ரவரி மாதம் இறுதியில் நடைபெறும் என தெரிவித்தார். 
 
உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னரே, அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது சுமார் 2 லசம் பேர் கட்சி மாற உள்ளனர் என்பது அதிமுக தலைமையை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேசுறதுக்கு டைம் தர மாட்றாங்க! – வெளிநடப்பு செய்த திமுக!