Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று தொடங்குகிறது அதிமுக பொன்விழா! – பிரம்மாண்டமாக கொண்டாட திட்டம்!

Webdunia
ஞாயிறு, 17 அக்டோபர் 2021 (09:24 IST)
இன்று அதிமுக தொடங்கப்பட்டு 49 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி பொன்விழா கொண்டாட்டத்தை அதிமுக தொடங்கியுள்ளது.

1972ல் திமுகவிலிருந்து விலகிய எம்ஜிஆர் அதே ஆண்டு அக்டோபர் 17ம் நாளில் அதிமுக கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கி இன்றோடு 49 ஆண்டுகள் முடிவடையும் நிலையில் கட்சி 50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

இந்நிலையில் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும் மாநிலம் முழுவதும் அதிமுக பொன்விழாவை கொண்டாட அதிமுக தொண்டர்கள் திட்டமிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments