Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெ. வீட்டில் சோதனை - டிவியில் பார்த்த அதிமுக தொண்டர் அதிர்ச்சி மரணம் (வீடியோ)

Advertiesment
ஜெ. வீட்டில் சோதனை - டிவியில் பார்த்த அதிமுக தொண்டர் அதிர்ச்சி மரணம் (வீடியோ)
, செவ்வாய், 21 நவம்பர் 2017 (11:20 IST)
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்துவதை தொலைக்காட்சியில் கண்டதால் கரூர் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக (அம்மா அணி) தொண்டர் எஸ்.நடராஜன் அதிர்ச்சியில் உயிரிழந்தார். 


 

மறைந்த தமிழக முதல்வர் அம்மா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்துவதை தொலைக்காட்சியில் கண்டதால் கரூர் மாவட்டம்., தோகைமலை ஓன்றியம்., நெய்தலூர் ஊராட்சி., கோட்டைமேடு பகுதியை சேர்ந்த கழக தொண்டர் எஸ்.நடராஜன் (வயது 58) அதிர்ச்சி அடைந்தார். இந்த அதிர்ச்சியில் நடராஜனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 
 
இந்நிலையில் அ.தி.மு.க-வின் எடப்பாடி அணியும், ஒ.பி.எஸ் அணியும் கண்டுகொள்ளாத நிலையில், அ.தி.மு.க (அம்மா அணி) கழக பொதுச்செயலாளர் சசிகலா உத்தரவுப்படி., துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆலோசனைப்படி, நடராஜன் குடும்பத்தினருக்கு நிதி உதவியை கழக அமைப்பு செயலாளரும், கரூர் மாவட்ட கழக செயலாளருமான வி.செந்தில்பாலாஜி நேரில் வழங்கி ஆறுதல் கூறினார். நடராஜன் மனைவி தனம் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் நிதி உதவி வழங்கப்பட்டது.
 
சி.ஆனந்தகுமார் - செய்தியாளர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகலாவிடம் நாளை விசாரணை? - வருமான வரித்துறையினர் அதிரடி