Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிமுக கட்சியை ஒன்றுபடுத்தும் சக்தி படைத்தவர்களை தலைவராக ஏற்றுக்கொள்ள தயார்-முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன்!

அதிமுக  கட்சியை ஒன்றுபடுத்தும் சக்தி படைத்தவர்களை  தலைவராக ஏற்றுக்கொள்ள தயார்-முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன்!

J.Durai

திருச்சி , வெள்ளி, 7 ஜூன் 2024 (11:16 IST)
முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
 
அப்போது அவர் கூறியதாவது:-
 
1975-ல் அதிமுகவில் உட்கட்சி பிரச்சினை ஏற்பட்டபோது, சிக்கல் தீர்ப்பு குழு என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி எம்.ஜி.ஆர் தீர்வு கண்டார்.
 
இப்போது அதேபோன்று ஒரு குழுவை ஏற்படுத்தி உரிய தீர்வு காண வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
 
எங்கள் கட்சியின் கொள்கையை புரட்சித் தலைவர் வகுத்தார். கட்டுப்பாடுகளை புரட்சி தலைவி வகுத்தார். அதன்படிதான் செயல்பட வேண்டும்.
பாஜகவுடன் கூட்டணி வைத்த 'ஜெயலலிதாவே இனி அவர்களுடன் கூட்டணி இல்லை என்பதை தெளிவாக சொல்லிவிட்டு சென்றுள்ளார்.
 
கட்சியை வளர்த்தவர்களுக்குதான் தோல்வியின் வலி தெரியும். எனக்கு வலிக்கிறது.
அதிமுக பணக்காரர்களால் உருவான கட்சி அல்ல. 
 
ஏழை எளியவர்களால் எழுச்சி பெற்ற இயக்கம்.
கட்சியை ஒன்றுபடுத்தும் சக்தி படைத்தவர்கள் யாராயினும், அவர்களை தலைவராக ஏற்றுக்கொள்ள தயார்.
சசிகலா 2 ஆண்டுகளாக அறிக்கை விட்டுக் கொண்டிருப்பதை தவிர இணைப்பு முயற்சிக்கு வேறு என்ன நடவடிக்கை எடுத்தார்? 
டி.டி.வி.தினகரன் தனிக்கட்சி தொடங்கி சென்றுவிட்டார். 
 
அவர் எப்படி அதிமுகவை ஒன்றிணைப்பது குறித்து பேச இயலும் 
ஓ பன்னீர்செல்வம் ஆரம்பித்தது அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஆனால் அவர் அதிமுகவை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டார் போட்டியிட வேண்டாம் என அவரிடம் கூறியும் கேட்கவில்லை தொண்டர்கள் உரிமையை மீட்பதையும் நழுவ விட்டுவிட்டார்.
 
போட்டியிட்டால் 40 தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும் என கூறினோம், அதையும் கேட்கவில்லை. எடப்பாடி யார் நான் எப்போது சென்றாலும் சேர்த்துக்கொள்வார்.வருகிற 10-ந்தேதி (திங்கட்கிழமை) மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சமாதியில் மண்டியிட்டு நீங்கள் உருவாக்கிய இந்த இயக்கம் இந்த தேர்தலில் தடம் புரண்டு விட்டது.
 
மீண்டும் அதிமுக ஒன்றுபட்டு ஒரே சக்தியாக திரண்டு வெற்றி பெற எங்களுக்கு அந்த வல்லமையை தர வேண்டும் என பிரார்த்திக்க உள்ளேன். ஓபிஎஸ் அணியிலிருந்து வேறு யாராவது வருவார்களா என்று கேட்டால் இது என்னுடைய விருப்பம் நான் மட்டும்தான் செல்ல இருக்கிறேன். என்றார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காங்கிரஸ் கட்சியில் இணைந்த சுயேச்சை எம்பி.. சதமடித்த காங்கிரஸ் எம்பிக்கள் எண்ணிக்கை..!