Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆட்சியை காப்பாற்றி கொள்ள அதிமுகவுக்கு கிடைத்த இன்னொரு ஐடியா!

ஆட்சியை காப்பாற்றி கொள்ள அதிமுகவுக்கு கிடைத்த இன்னொரு ஐடியா!
, செவ்வாய், 7 மே 2019 (06:58 IST)
மூன்று அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகரால் அனுப்பட்ட நோட்டிஸ் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில் மே 23, தேர்தல் முடிவுக்கு பின் அதிமுக அரசு என்ன ஆகுமோ? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இந்த நிலையில் மூன்று எம்.எல்.ஏக்கல் விவகாரம் குறித்த வழக்கு முடிவுக்கு வரும் வரை சட்டமன்றத்தில் சபாநாயகர் மீதோ, அரசு மீதோ நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கூடாது என அதிமுக அரசு சுப்ரீம் கோர்டில் தனியாக ஒரு மனு தாக்கல் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
அவ்வாறு ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டால் இந்த மனுவின் விசாரணையும் மூன்று எம்.எல்.ஏக்கள் வழக்கின் விசாரணையும் முடியும் வரை அதிமுக தனது ஆட்சியை காப்பாற்றி கொள்ள்ள வாய்ப்பு உள்ளது. இந்த இரண்டு வழக்குகளும் முடிவடைய ஏறக்குறைய ஒரு வருடம் ஆகிவிட்டால் அதன் பின் உள்ள மீதி ஒரு வருடத்தை ஏதாவது செய்து ஆட்சியை அதிமுக காப்பாற்றி கொள்ளும் என்றே கருதப்படுகிறது
 
webdunia
ஒருவேளை இந்த ஐடியா பயனளிக்கவில்லை என்றால் ஐந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாகவும், அந்த ஐந்து தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் வரை ஆட்சியை காப்பாற்றி கொள்ளலாம் என்றும் அதிமுக தரப்பில் இருந்து கூறப்படுகிறது. மொத்தத்தில் திமுக தலைவரின் முதல்வர் கனவு 'கானல் நீராகிவிடும் என்று அதிமுகவினர் தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எங்கள் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் வெறும் ரூ.98 ஆயிரம் மட்டுமே: மார்ட்டின் மனைவி