Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எங்கள் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் வெறும் ரூ.98 ஆயிரம் மட்டுமே: மார்ட்டின் மனைவி

Advertiesment
எங்கள் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் வெறும் ரூ.98 ஆயிரம் மட்டுமே: மார்ட்டின் மனைவி
, திங்கள், 6 மே 2019 (21:13 IST)
லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு மற்றும் அலுவலகங்களில் சமீபத்தில் ஐந்து நாட்கள் தொடர் சோதனை செய்தபோது கோடிக்கணக்கான பணம் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஆதாரத்துடன் செய்தி வெளிவந்தது.
 
ஆனால் கோவையில் எங்கள் இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் ரூ98,820 மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
 
மேலும் எங்கள் வீட்டினுள் பாதாள அறையோ, கட்டிலோ அல்லது படிகட்டுகளோ இல்லை என்றும், இது தொடர்பாக வெளியான தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என்றும் லீமா ரோஸ் தெரிவித்தார்.
 
வருமான வரித்துறையினர் கைப்பற்றிய பணம் எவ்வளவு என்பது குறித்த அத்துறையின் அதிகாரிகள் அதிகாரபூர்வமாக எந்தவித தகவலையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஷ்ய விமான விபத்து: அவசரமாக தரையிறங்கிய விமானம் தீப்பிடித்து 41 பேர் பலி