காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக அதிமுக சார்பில் உண்ணா விரதப் போராட்டம் நடத்தப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கொடுத்த 6 வார கெடு நேற்றோடு முடிவடைந்தது. ஆனாலும், உச்ச நீதிமன்றம் எந்த அறிவிப்பையும் அறிவிக்கவில்லை. இது தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆளும் அதிமுகவை தவிர மற்ற தமிழக அரசியல் கட்சிகள் பாஜக தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன. அந்நிலையில், மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவெடுத்திருப்பதாக நேற்று செய்தி வெளியானது.
இந்நிலையில், மதுரையில் அதிமுக சார்பில் 12 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஓ.பி.எஸ் “ மத்திய அரசை கண்டித்தும், மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியும் வருகிற ஏப்ரல் 2ம் தேதி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.