Publish Date: Thu, 20 Jan 2022 (09:06 IST)
Updated Date: Thu, 20 Jan 2022 (10:44 IST)
கேபி அன்பழகன் வீட்டின் முன் குவிந்த அதிமுக தொண்டர்கள்: பெரும் பரபரப்பு!
முன்னாள் அதிமுக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான 57 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை செய்து வருகின்றனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் மற்றும் அவரது மனைவி மகன்கள் மருமகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் வீட்டில் சோதனை நடைபெற்று வருவதாக வந்த தகவலை அடுத்து தர்மபுரியில் உள்ள கேபி அன்பழகன் வீட்டின் முன் அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் குவிந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
இந்த நிலையில் அந்த பகுதியில் அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருப்பதற்காக காவல்துறையினரை குவித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.