Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக vs திமுக - 131 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதல்!!

Webdunia
சனி, 20 மார்ச் 2021 (14:02 IST)
131 தொகுதிகளில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் நேருக்கு நேர் மோதுகின்றன என தகவல் வெளியாகியுள்ளது. 

 
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் கடந்த 12 ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்து வந்தனர். 
 
தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் நேற்று வரை 7,133 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதில் ஆண்கள் 6,080 பேரும், பெண்கள் 1,050 பேரும் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், இந்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில், இரு அணிகளுமே தொகுதிகளில் கள நிலவரங்களை ஆராய்ந்தே தொகுதிகளை தேர்வு செய்து வேட்பாளர்களையும் களம் இறக்கி உள்ளது. அனைத்து வேட்பாளர்களும் மனுதாக்கல் செய்து விட்டனர். 131 தொகுதிகளில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் நேருக்கு நேர் மோதுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் காணாமல் போய்விட்டேனா? ‘காணவில்லை’ போஸ்டருடன் வந்து புகார் அளித்த இளைஞர்..!

மொத்த டேட்டாவையும் அழித்துவிட்டு நாடகமாடிய AI! அதிர்ச்சிக்குள்ளான நிறுவனம்!

எங்களை இழிவுப்படுத்திய திமுக கட்சி விஜய்யிடம் வீழும்! - தமிழ்நாடு முஸ்லீம் லீக்!

7 வயது மகளை கழுத்தறுத்து கொலை செய்த தந்தை.. சென்னை அருகே அதிர்ச்சி சம்பவம்..!

திமுக கூட்டணி கட்சிகளுக்கு நான் அழைப்பு விடுக்கவே இல்லை: ஈபிஎஸ் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments