Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மத்திய அரசும் மாநில அரசும் இரு சக்கரங்கள்… திமுகவின் குற்றச்சாட்டுக்கு எடப்பாடி பழனிச்சாமி பதில்!

Advertiesment
மத்திய அரசும் மாநில அரசும் இரு சக்கரங்கள்… திமுகவின் குற்றச்சாட்டுக்கு எடப்பாடி பழனிச்சாமி பதில்!
, சனி, 20 மார்ச் 2021 (13:17 IST)
அதிமுக அரசு மத்திய அரசுக்கு அடிமையாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டுக்கு எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்துள்ளார்.

தேர்தல் களம் இப்போது பரபரப்படைந்து வருகிறது. ஆளும்கட்சியை எதிர்க்கட்சி குறை சொல்வதும் அதற்கு அதிமுகவினர் பதிலளிப்பதுமாக பிரச்சாரங்களில் அனல்பறக்க ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் திமுக பிரச்சாரக் கூட்டங்களில் அதிமுக அரசு மத்திய அரசுக்கு அடிமையாகக் கிடக்கின்றது என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.

இந்நிலையில் இப்போது அதற்கு பதிலளிக்கும் விதமாக எடப்பாடி பழனிச்சாமி விருத்தாசலத்தில் பேசியுள்ளார். அதில் ‘அதிமுகவும் அரசும் மத்திய ஆட்சிக்கு அடிபணிந்துவிட்டது என்று ஸ்டாலின் பேசுகிறார். மத்திய அரசும் மாநில அரசு இரு வண்டிச் சக்கரங்கள் போன்றவை. அவை இணைந்து செயல்பட்டால்தான் திட்டங்களை நிறைவேற்ற முடியும்.

எந்தத் திட்டமாக இருந்தாலும் அனுமதிப்பது மத்திய அரசு. எனவே தான் அவர்களோடு இணக்கமான உறவை வைத்துக் கொண்டுள்ளோம்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோடி மஸ்தான் வேலை தமிழகத்தில் பலிக்காது - ஸ்டாலின் பாய்ச்சல்!!