Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் சேர்ந்து முடிவு எடுக்கிறார்களா?

அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் சேர்ந்து முடிவு எடுக்கிறார்களா?
, சனி, 20 மார்ச் 2021 (13:01 IST)
அதிமுகவின் மாநில எம்.ஜி.ஆர் இளைஞரணி நிர்வாகியான கிரம்மர் சுரேஷ், சுயேட்சையாக போட்டியிடுவதற்காக மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல். 

 
அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் சேர்ந்து முடிவு எடுக்கிறார்களா? ஆளுக்கு ஒரு முடிவு எடுக்கிறார்களா என்ற சந்தேகம் உள்ளது, அதிமுக தலைமையில் உள்ளவர்களின் ஆதரவாளர்களுக்கு தான் வாய்ப்புகள் வழங்கப்படுகிறது அதிமுக மாநில நிர்வாகி கிரம்மர் சுரேஷ் பேட்டி.. மதுரை மத்திய தொகுதியில் அதிமுக சார்பில் அதன் தோழமை கட்சியான பசும்பொன் தேசிய கழகத்திற்கு ஒதுக்கீடு செய்து அதன் வேட்பாளராக ஜோதி முத்துராமலிங்கம் என்பவர் போட்டியிடுகிறார். 
 
இந்நிலையில் அதிமுகவின் மாநில எம்.ஜி.ஆர் இளைஞரணி நிர்வாகியான கிரம்மர் சுரேஷ் அதிமுகவில் விருப்பமனு செலுத்தியநிலையில்  அதிமுகவிற்கு தொகுதி ஒதுக்கீடு செய்யாத நிலையில் இன்று சுயேட்சையாக போட்டியிடுவதற்காக மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். 
 
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பேசியபோது , 15 ஆண்டுகாலம் அதிமுகவில் உழைத்த நான தனித்துவிடப்பட்டதால் சுயேட்சையாக போட்டியிடுகிறேன், டிடிவி தினகரனால் அதிமுகவில் இணைந்தேன் அம்மாவின் கையால் அதிமுக உறுப்பினர் அட்டை பெற்றேன், வாய்ப்பை சரியான நபர்களுக்கு வழங்குவதுதான் நல்ல தலைமை, அம்மா வளர்த்தெடுத்த அதிமுகவில் எத்தனையோ தொண்டர்கள் உள்ள நிலையில் அதிமுக தொண்டரை வேட்பாளராக அறிவிக்க முடியாத காரணம் என்ன? 
 
அதிமுகவின் தலைமையின் செயலை உணர்த்தும் வகையில் சுயேட்சையாக போட்டியிடுகிறேன், எனவும் அம்மாவின் தொண்டர்களின் மனசாட்சியாக நிற்கிறேன். நான் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தும் அதிமுக தலைமை என்னை அழைத்து பேசவில்லை, மத்திய தொகுதி வேட்பாளரை அறிவித்தது யார் எனவும், ஒருங்கிணைப்பாளர்கள் சேர்ந்து முடிவு எடுக்கிறார்களா? ஆளுக்கு ஒரு முடிவு எடுக்கிறார்களா என்ற சந்தேகம் உள்ளது, கையில் கட்சிகொடியை பிடிக்காத நபர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. 
 
உண்மையாக உழைப்பவர்களை அடையாளம் கண்டு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. தலைமையில் பதவியில் உள்ளவர்களின் ஆதரவாளர்களுக்கு தான் வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. தலைமையின் ஆதரவை எப்படி பெறுவது என்பது தெரியவில்லை. உயிரை துச்சமென கருதி கழகபணி ஆற்றினேன், அதிமுகவில் இருந்து வெளியேறிவிட்டேன் எனவும் மக்களை நம்பி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறுவது உறுதி, மக்களுக்காக உயிரை கொடுப்பேன், நான் வெற்றிபெற்றால் வீட்டில் ஒரு எம்.எல்.ஏ இருப்பார், அந்த எம்எல்ஏ நானாக இருப்பேன் குடும்பத்தில் ஒருவனாக இருப்பேன் என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோடி மஸ்தான் வேலை தமிழகத்தில் பலிக்காது - ஸ்டாலின் பாய்ச்சல்!!