Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒத்துவராத அதிமுக - தேமுதிக டீலிங்... அடுத்து என்ன??

Webdunia
திங்கள், 8 மார்ச் 2021 (09:23 IST)
நாளை மாவட்ட செயலாளர்களுடன் அவசர ஆலோசனை கூட்டத்திற்கு தேமுதிக அழைப்பு விடுத்துள்ளது. 

 
அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு உடன்பாடு இன்று கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது. தேமுதிகவுக்கு 15 தொகுதிகள் வரை தருவதற்கு அதிமுக முன்வந்துள்ள சூழ்நிலையில் இன்று மாலை தேமுதிக தலைவர் விஜயகாந்த் முன்னிலையில் அதிமுக - தேமுதிக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளதாக தகவல் வெளியாகியது. 
 
ஆனால் தற்போது நாளை மாவட்ட செயலாளர்களுடன் அவசர ஆலோசனை கூட்டத்திற்கு தேமுதிக அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த கட்சி வெளியிட்டுள்ள கடிதத்தில், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட கழக செயலாளர்கள் அவசர ஆலோசனை கூட்டம் நாளை (மார்ச் 09) காலை 10.30 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது. மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மக்களே! 17 வருடம் கழித்து மீண்டும் வருகிறது டபுள் டக்கர் பேருந்துகள்!

தேஜஸ்வி யாதவை அடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.யின் மனைவிக்கும் இரட்டை வாக்காளர் அட்டை!

ஆணுறுப்பு சிதைக்கப்பட்டு அணையில் வீசப்பட்ட பிணம்.. 14 பேர் கைது..!

கள்ளக்காதலை விட்டுவிட கெஞ்சிய கணவர்.. மனைவி மறுப்பு.. அதன்பின் நடந்த விபரீதம்..!

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவோம்.. டிரம்ப் மிரட்டலுக்கு பயப்படாத இந்தியா.. அதிர்ச்சியில் அமெரிக்கா..!

அடுத்த கட்டுரையில்
Show comments