இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறதா தமாகா?

Webdunia
திங்கள், 8 மார்ச் 2021 (09:22 IST)
அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட உள்ளதாக சொல்லப்படுகிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தொகுதிப் பங்கீடு குறித்து தனது கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது அதிமுக. ஆனால், தேமுதிகவிற்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் தேமுதிகவினர் அதிருப்தியிலும் உள்ளனர்.  இப்போது வரை அந்த கூட்டணியில் உள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் மற்றும் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல தமிழ் மாநிலக் காங்கிரஸோடும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது த மா கா நிர்வாகிகள், தங்கள் கட்சியின் சின்னமான சைக்கிளைப் பெறுவதற்காக 12 தொகுதிகள் கேட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனால் ஒற்றை இலக்க அளவிலேயே தருவதற்கு அதிமுக தயாராக இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் சைக்கிள் சின்னத்தை இன்னும் பெறவில்லை என்பதால் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட சொல்வதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments