Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கூட்டணியை முடிவு செய்யும் கருணாநிதி சிலை திறப்பு விழா-எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழா

Advertiesment
கூட்டணியை முடிவு செய்யும் கருணாநிதி சிலை திறப்பு விழா-எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழா
, புதன், 23 ஜனவரி 2019 (08:38 IST)
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் பல விழாக்களின் பின்னணியில் அரசியல் இருப்பதாக கருதப்படுகிறது. சமீபத்தில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டவர்கள் கருணாநிதியின் புகழ் குறித்து பேசியதைவிட கூட்டணி குறித்தே அதிகம் பேசினர். இந்த விழாவிற்கு பின் திமுக-காங்கிரஸ் கூட்டணி கிட்டத்தட்ட உறுதியானது

இதேபோல் அதிமுக-பாஜக கூட்டணி ஏற்படுமா? ஏற்படாதா? என்ற சந்தேகம் பலர் மனதில் இருந்து வரும் நிலையில் மதுரையில் வரும் 27ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனை தொடக்க விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை அதிமுக, பாஜக ஆகிய இரண்டு கட்சிகளின் தொண்டர்களும் செய்து வருகின்றனர். சமீபத்தில் அமைச்சர் உதயகுமார் விழாவுக்கான ஏற்பாடுகளை பார்வையிட்டார்

webdunia
இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், ஆளுநர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் கலந்து கொள்வதால் இந்த விழா எய்ம்ஸ் மருத்துவமனையின் தொடக்க விழாவாக மட்டுமின்றி அதிமுக-பாஜக கூட்டணியை உறுதி செய்யும் விழாவாக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கணித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மேக்கப் முக்கியமில்ல: உயிர்தான் முக்கியம்; பெண்களுக்கு அமைச்சர் நறுக்!!