Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ்நாட்டில் பாஜகவின் கணக்கு இதுதான்! இதோ சொல்லிட்டாருல்ல மத்திய அமைச்சர்!

Advertiesment
தமிழ்நாட்டில் பாஜகவின் கணக்கு இதுதான்! இதோ சொல்லிட்டாருல்ல மத்திய அமைச்சர்!
, செவ்வாய், 22 ஜனவரி 2019 (17:13 IST)
இன்னும் நான்கு மாதமே  நாடாளுமன்ற தேர்தலுக்கு உள்ள நிலையில், கூட்டணி அமைக்கும் விஷயத்தில் பாஜக முழு கவனம் செலுத்திவருகிறது.  அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. 
இது தொடர்பாக  மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பேசுகையில், அதிமுக - பா.ஜனதா கூட்டணி அமையும் என நம்பிக்கை தெரிவித்தார். 
 
காங்கிரஸ் -திமுக கூட்டணி  உறுதியாகிவிட்ட நிலையில், அதிமுகதான் பாஜகவின் விருப்பமாக உள்ளது. கடந்த முறை அதிமுக தனி கட்சியாக களம் இறங்கி 37 இடங்களில் வென்று சாதனை படைத்தது. அப்போது பாஜக, பாமக, தேமுதிக, என்ஆர் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து 3 இடங்களை கைப்பற்றியது.

ஆனால் அந்த கூட்டணி இந்த முறை வாய்ப்பில்லை என்பதை பாஜக தெளிவாக புரிந்து வைத்திருக்கிறது. அதிமுகவிடம் பேசி கூட்டணிக்கு ஒப்புக்கொள்ள வைக்க வேண்டும் என்பதில் பாஜகவின் மேல்மட்ட தலைவர்கள் உறுதியாக உள்ளனர்.

இது தொடர்பாக பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள  இந்திய குடியரசுக் கட்சி தலைவர், ராம்தாஸ் அத்வாலே புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக - பா.ஜனதா கூட்டணி அமையும் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும் ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்ற டிடிவி தினகரன் அதிமுகவுடன் இணைய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யார் அந்த தமிழிசை? கடுப்பில் கண்டபடி பேசிய தம்பிதுரை