Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Siva
வெள்ளி, 31 ஜனவரி 2025 (16:02 IST)
தமிழக வெற்றி கழகத்தில் இன்று ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்மல் குமார் ஆகிய இருவரும் இணைந்த நிலையில் இருவருக்கும் பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் ஆரம்பித்த தமிழக வெற்றி கழகம் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் போட்டியிட இருக்கும் நிலையில் இந்த கட்சியில் இணைய மற்ற கட்சியில் உள்ள பிரமுகர்கள் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து வெளியே வந்த ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றி கழகத்தில் சேர இருப்பதாகவும் அவருக்கு மாநில அளவில் பதவி வழங்க இருப்பதாகவும் கூறப்பட்டது. அதேபோல் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நிர்மல் குமார் தற்போது அதிமுகவிலிருந்தும் விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளார்.

இந்த நிலையில் ஆதவ் அர்ஜுனாவுக்கு தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் என்ற பதவி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் நிர்மல் குமாருக்கு தமிழக வெற்றி கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதை போல் பேச்சாளர் ராஜ்மோகன் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீனாவின் தியான்ஜின் நகரில் பிரதமர் மோடி: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பு

சென்னை விமான நிலையத்தில் திடீர் சோதனை செய்யும் சிபிஐ அதிகாரிகள்.. என்ன காரணம்?

ஐ.நா. பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவிடாமல் தடுக்க, பாலஸ்தீன அதிபரின் விசாவை ரத்து செய்தது அமெரிக்க அரசு!

விக்கிரவாண்டி சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு.. ரூ.70 முதல் ரூ.395 அதிகம் என தகவல்..!

விஜய் பேசுவதை கண்டுகொள்ளாதீர்.. தொண்டர்களுக்கு ஈபிஎஸ் அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments