Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விற்பனை கவுன்டர்கள்! குடிமகன்களுக்கு இனி காத்திருக்க வேண்டாம்..!

Advertiesment
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விற்பனை கவுன்டர்கள்! குடிமகன்களுக்கு இனி காத்திருக்க வேண்டாம்..!

Mahendran

, வெள்ளி, 18 அக்டோபர் 2024 (10:54 IST)
தமிழகத்தில் டாஸ்மாக் கடைக்கு வரும் குடிமகன்களின் காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்காக 3500 டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கவுண்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் உள்ளது.

தமிழகத்தில் உள்ள 4800க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபான விற்பனை நிலையங்கள் இருக்கும் நிலையில் அதில் 3500 கடைகளில் தினந்தோறும் இரண்டு லட்சத்துக்கு மேல் விற்பனையாகி வருகிறது. இரண்டு அல்லது மூன்று கவுண்டர்கள் இருந்தால் குடிமகன்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் மதுபானங்களை வாங்கிச் செல்லலாம் என்றும் குறிப்பாக, தீபாவளி போன்ற பண்டிகை நெருங்கி வரும் நிலையில், டாஸ்மாக் கடைக்கு வரும் குடிமகன்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால் கூட்ட நெரிசலை கையாள்வதற்காக கூடுதல் விற்பனை கவுண்டர்கள் திறக்கப்பட இருப்பதாக டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும், டாஸ்மாக் கடைகளில் க்யூஆர் கோட் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும் விரைவில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறை அறிமுகம் செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கவுண்டர்களை சேர்ப்பதற்கு முன், இருக்கும் இடத்தை விரிவுபடுத்தி தர வேண்டும் என்றும், அப்போதுதான் மதுபிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை இருக்காது என்றும் டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் கூறி வருகின்றனர்.


Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் தொழிற்சாலைகளா? - அமைச்சர் டி.ஆர்.பி ராஜா விளக்கம்!