நடிகை விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்றாலும் சீமான் வரும் 18ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை வளசரவாக்கம் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்ற நிலையில் சட்ட நிபுணர்களின் ஆலோசனைக்கு அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
மேலும் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதால் சட்ட நிபுணர்களின் ஆலோசனைக்கு அனுப்பி, சட்ட நிபுணர்கள் கருத்துக்கு பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை வளசரவாக்கம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நடிகை விஜயலட்சுமி புகாரை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் சீமான் தரப்பு மனு தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.