நடிகை காத்ரினா கைப் – விக்கி கவுஷல் திருமணத்திற்கு கடும் கட்டுப்பாடுகள் !

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (22:43 IST)
பிரபல பாலிவுட் நடிகை காத்ரினா கைப்நடிகர் விக்கி கவுஷல் திருமணம் கடும் கட்டுப்பாடுகளுடன் நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தி சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக காத்ரினா கைப் – விக்கி கவுசல் திருமணம் வரும் டிசம்பர் 7,8,9 ஆகிய தேதிகளில் ராஜஸ்தான் மாநிலம் பர்வாரா என்ற இடத்தில் உள்ள ஒரு  தனியார் ரிசார்டில் நடக்க வுள்ளது.

மேலும், காத்ரினா கைப்வை விட நடிகர் விக்கி கவுஷல் 5 வருடங்கள் இளையவர் ஆவார். இவர்கள் சில ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்யவுள்ளனர்.

இந்நிலையில், 9 ஆம் தேதி நடக்கவுள்ள திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள  விருந்தினர்களுக்கு தனிவிமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து நடனக்குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர். அதேபோல் விருந்திலும் பல வகையான உணவுகள் இடம்பிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தத் திருமணத்தில் கொரோனா  2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் 120 பேருக்கு மட்டுமெ அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், முன்னேச்சரிகை நடவடிக்கையாக ராஜஸ்தான் மாநிலம் மாதேபூர் மாவட்ட  ஆட்சியர் அறிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் வி.சேகர் காலமானர்!...

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாதா?!.. பொங்கிய நடிகை ரோஜா!...

வந்தே பாரத், தேஜஸ் ரயில்களில் உணவு கட்டாயமா? பயணிகள் மத்தியில் குழப்பம்!

தாம்பரம் அருகே விமானப்படை பயிற்சி விமானம் விபத்து: விமானிகள் என்ன ஆனார்கள்?

பிகார் தேர்தலில் என்.டி.எ வெற்றிமுகம்.. சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு

அடுத்த கட்டுரையில்
Show comments