2 டேஸ் தடுப்பூசி போட்டாலும் புதிய வகை கொரோனா வைரஸ் தாக்கலாம் என எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
தென்னாப்பிரிக்கா ஹாங்காங் உள்ளிட்ட ஒருசில நாடுகளில் புதிய வகை வைரஸ் மிக வேகமாக பரவி வருவது மனித குலத்திற்கே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் புதிய வகை வைரஸ் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வகைகளிலேயே மிகவும் வீரியமானது என்றும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் மோசமான வைரஸ் என்றும் விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் புதிய வகை வைரஸ் இரண்டு டோச் தடுப்பூசி செலுத்திவர்களை கூட தாக்கலாம் என்றும் அதனால் பூஸ்டர் டோஸ் போடுவதை வேகப்படுத்த வேண்டும் மத்திய அரசுக்கு என்பது அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
இதுவரை பூஸ்டர் செலுத்தியவர்களில் 40 முதல் 93 சதவீதம் பேருக்கு புதிய வகை வைரஸில் இருந்து பாதுகாப்பு அதிகரித்துள்ளதாக இஸ்ரேலில் நடந்த ஆய்வுகள் கூறுவதாகவும் எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்