Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அந்த குழந்தைகளின் நிலைமை என்ன? சத்துணவு பணியாளர்களுக்கு சம்பளம் தரங்களா?

Advertiesment
அந்த குழந்தைகளின் நிலைமை என்ன? சத்துணவு பணியாளர்களுக்கு சம்பளம் தரங்களா?
, சனி, 28 மார்ச் 2020 (15:50 IST)
சீனாவில் இருந்து பரவிய கொடூர வைரஸ் தொற்று  இந்தியா முதற்கொண்டு 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் மிகவேகமாகப் பரவி வருகிறது. இதனால் நாடுமுழுக்க வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதிவரை ஊடரங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் கடைபிடிக்கவேண்டுன காவல்துறையினர்  தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இதனால் சாமானிய மக்களின் வாழ்க்கை முழுவதுமாக முடங்கியுள்ளது. தனியார் அரசு அலுவலகளில் வேலைபார்த்தவர்கள் பெரும்பாலானோருக்கு வீட்டில் இருந்தபடிஏ வேலை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருந்தும் அன்றாடம் கூலி வேலை செய்யும் தொழிலாளர்களின் நிலைமை பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிவிட்டார். இதனை யோசித்த அரசாங்கம் அவர்களுக்கு மாத ஊதியம் என ஒரு தொகையை ஒதுக்கீடு செய்துள்ளனர.

ஜநிலையில் தற்போது சொல்லவரும் தகவலென்னவென்றால் நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழகத்தில் சத்துணவு திட்டம் எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். "தமிழகத்தில் லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு பள்ளி சத்துணவு மட்டுமே அன்றாட உணவு. இப்போதைய சூழ்நிலையில், ஏழை பள்ளி சிறாரின் பசி நீக்க என்ன ஆவண செய்யப்பட்டு உள்ளன? சத்துணவு பணியாளர்கள் நிலைமை என்ன? அவர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு வழங்கப்பட்டுள்ளதா? " என கேள்வி கேட்டுள்ளார். இது தரமான மற்றும் நியாயமான கேள்வி கட்டாயம் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளின் கடமை பதில் அளிக்க வேண்டும் என கமென்ட்ஸ் செய்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீனாவில் மீண்டும் கொரோனா நோய்த்தொற்று... அதிகாரிகள் தகவல் !